நீங்கள் நகைக்கடன் தள்ளுபடி பெறவில்லையா?? அப்போ இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க..

 
loan

தமிழக அரசின் நகைக்கடன் தள்ளுபடிக்கு பெற தகுதி பெறாதவர்கள் தங்களின் ஆட்சேபனை மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  .
 
திமுக ஆட்சிக்கு வந்தவுடன், தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து பெறப்பட்ட   கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என  அறிவித்தது. பின்னர்  நகைக்கடன் விவரங்களை ஆய்வு செய்த போது, பலர் முறைகேடு செய்திருப்பது    தெரியவந்தது.  பின்னர் முறையாக ஆய்வு செய்து நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல்   வெளியிடப்பட்டது.

நகைக்கடன் தள்ளுபடி செய்வதில் அரசு உறுதி… யார் யாருக்கெல்லாம் தள்ளுபடியாகும்? ஆகாது?

அதன் அடிப்படையில்,  நகைக்கடன்  வாங்கிய 48 லட்சம் பேரில்,  13 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடைத்துள்ளது. மீதமுள்ள  35 லட்சம் பேர் நகைக்கடன் பெற தகுதி இல்லாதவர்கள் என்றும் தெரியவந்தது.  இது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்நிலையில் தற்போது  நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி பெறாதோர் தங்களின் ஆட்சேபனை மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5 பவுனுக்கு மேல் நகைக்கடன் வாங்கியவர்களுக்கு புது ஆப்பு – அதிரடி காட்டும் அரசு!

இதுகுறித்து   விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதில், “ விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு துறை கட்டுப்பாட்டில் செயல்படும் நகைக்கடன் வழங்கும் கூட்டுறவு நிறுவனங்களில் தமிழக அரசின் ஆணையின்படி பொது நகை கடன் தள்ளுபடி திட்டம் 2021ன் கீழ் நகைக் கடன்கள் தள்ளுபடிக்கு தகுதியான பயனாளிகள் பட்டியல் https://virudhunagar.nic.in என்கிற வலை தளத்திலும், விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வலைதளமான www.vrdccbank.inல் கடந்த 8.4.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
 நகைக்கடன் தள்ளுபடி : பட்ஜெட்டில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!
இந்த அரசாணையின்படி தள்ளுபடிக்கு தகுதியான பட்டியல் வலைதளத்தில் வெளியிடப்பட்ட 8.4.2022 முதல் 7.5.2022 வரை ஒருமாத காலத்தில் தள்ளுபடிக்கு தகுதி பெறாதோர் தங்களது ஆட்சேபனை மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை தொடர்புடைய கூட்டுறவுச் சங்கங்களுக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சரக துணைப்பதிவாளர் அலுவலகங்களில் மனுக்களை அளிக்கலாம்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.