சர்தார் வல்லபபாய் படேல் திருவுருவ படத்திற்கு ஆளுநர் மரியாதை!

 
tn

சர்தார் வல்லபபாய் படேல் ஜெயந்தி தினத்தையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

சர்தார் வல்லபபாய் படேல் ஜெயந்தி தினத்தில் அவருக்கு தேசம் மிகுந்த நன்றியுடனும் ஆழ்ந்த மதிப்புடனும் பணிவுடன் மரியாதை செலுத்துகிறது. நமது தேசிய சுதந்திர இயக்கத்தின் மகத்தான ஆளுமையான அவரது தணியாத மனப்பான்மை, அயராத முயற்சிகள், பாரதத்தின் கள யதார்த்தம் மற்றும் உலகளாவிய சூழ்நிலைகளில் வேரூன்றிய அவரது தொலைநோக்குத் தலைமைத்துவம், காலனித்துவ ஆட்சியாளர்கள் பாரதத்தின் அடிமடியில் 560-க்கும் மேற்பட்ட சுயாதீன ராஜ்ஜியங்களை உருவாக்கி பிளவுபடுத்தி இந்தியாவை மிக மோசமான குழப்பத்தில் விட்டு வெளியேறிய இக்கட்டான காலங்களில் நம் தேசத்தை ஒன்றிணைத்தது.


தனது தனித்துவ தலைமைத்துவத்தால் தேசத்தை ஒன்றிணைத்து அதன் பிரகாசமான எதிர்காலத்துக்கு படேல் அவர்கள் வலுவான அடித்தளத்தை அமைத்தார். அவரது பிறந்தநாளை தேசம் #தேசியஒற்றுமைதினம் ஆக கொண்டாடுகிறது. #சுயசார்புபாரதம் மற்றும் #வளர்ச்சியடைந்தபாரதம் என்ற அவரது கனவை 2047-ஆம் ஆண்டுக்குள் நனவாக்க இந்த சிறப்புமிக்க நாளில் மீண்டும் நாம் நம்மை உறுதிப்படுத்திக் கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.