ராஜ்பவன் என்றும் மக்களுக்கானது - ஆர்.என்.ரவி

 
ravi

சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற சிக்கிம் மாநிலம் உருவான நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. 

rn ravi

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “1975 ஆம் ஆண்டு சிக்கிம் இந்தியாவுடன் இணைந்தது. பல ஆண்டுகளாகவே இந்திய பண்பாட்டின் ஒரு பகுதியாகவே இருந்த சிக்கிமி, மகாதேவ் கோவில், விநாயகர் கோவில் ஆகியவை உள்ளது. ஆனால் பிரிட்டிஷ் அரசு சிக்கிம் இந்தியாவில் ஒரு பகுதி என்பதை ஏற்கவில்லை.  சமூக கலாச்சார ஒன்றிணைதல் என்பது இந்தியர்களுக்கு இயல்பாகவே உள்ளது. நாமும் நிறைய இடங்களில் இருப்பவர்களுடன் கலாச்சார ஒன்றிணைவில் ஈடுபடவேண்டும். விழாக்கள், கொண்டட்டங்களுமே நம்மை இணைக்கின்றனர். அரசியல் அடிப்படையில் மட்டுமே மாநிலங்கள் உள்ளன. ஆனால் கலாச்சார அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் ஒற்றுமை நிலவுகிறது. ஆகவே அனைத்து மாநில விழாக்களையும் கொண்டாட பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.


வேற்றுமையில் ஒற்றுமையே நமது சிறப்பு, ராஜ்பவன் என்றும் மக்களுக்கானது. அரசியல் அடிப்படையில் மட்டுமே மாநிலங்கள் நமக்குள் தனித்தனியாக உள்ளது, கலாசார அடிப்படையில் நமக்குள் ஒற்றுமை உள்ளது” என்றார்.