சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழக ஆளுநர் குடும்பத்துடன் சாமி தரிசனம்

 
RN Ravi

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில்,சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். மகா சிவராத்திரியையொட்டி சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழாவின் இறுதி நாள் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். 

இந்நிலையில் இன்று காலை சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடும்பத்துடன் ஆளுநார் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார். அவருடன் மனைவி லட்சுமி ரவி மற்றும் உறவினரும் சாமி தரிசனம் செய்தனர். நடராஜர் கோயிலுக்கு வருகை தந்த ஆளுநர் மற்றும் அவரது குடும்பத்திற்கு சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் கும்ப மரியாதை அளித்தனர். இதனை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். ஆளுநர் வருகையையொட்டி கடலூர், சிதம்பரம் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.