கூட்டுறவு பணியாளர்களுக்கு குட் நியூஸ்! நீண்டநாள் கோரிக்கைக்கு செவி கொடுத்த தமிழக அரசு
Oct 10, 2025, 17:29 IST1760097540334
அரசு ஊழியர்களை தொடர்ந்து கூட்டுறவு பணியாளர்களுக்கும் ஈட்டிய விடுப்பு சரண் (EL) சலுகையை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்களை தொடர்ந்து கூட்டுறவு பணியாளர்களுக்கும் ஈட்டிய விடுப்பு சரண் (EL) சலுகையை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகு அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறுவது நிறுத்திவைக்கப்பட்டது. இதனை, இந்த அக்டோபர் முதல் ஒப்படைத்து பணப் பயன்கள் பெறலாம் என அரசு ஏற்கெனவே தெரிவித்தது. இப்போது, கூட்டுறவு பணியாளர்களும் இதேபோல் பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது


