நடுக்கடலில் தமிழக மீனவர்களுக்கு நேர்ந்த கொடூரம்! இலங்கை கடற்கொள்ளையர்கள் அடாவடி

 
fishermen

தமிழக மீனவர்களின் வலைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து அட்டூழியத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

fishermen

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்தை  சேர்ந்த முத்துவேல் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரை சேர்ந்த நவீன், சச்சின், ராஜேந்திரன், மாதேஸ்வரன் ஆகிய நான்கு பேரும் நேற்று மதியம்  மீன்பிடிக்க  கடலுக்குச் சென்று கோடியக்கரைக்கு தென்கிழக்கே வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு பைபர் படகில் மூன்று இலங்கை கடற்கொள்ளையர்கள் வந்து இவர்களை வழிமறித்து கடலில் கிடந்த இவர்களது மீன்பிடி வலைகளை 2 லட்சம் மதிப்புடைய 350 கிலோ மீன் பிடி வலைகளை அறுத்து கொள்ளையடித்து கொண்டு தப்பிச் சென்றனர் இவர்கள் இன்று காலை வெறும் கையுடன் கரைக்கு வந்து சேர்ந்தனர் இதுகுறித்து கடலோர காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.