“காங்கிரசால் முடியாததை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முடித்துக் காட்டி இருக்கிறது”- அப்பாவு

 
அப்பாவு

இப்போது #GenZ இளைஞர்கள் மோடிக்கு மூன்றாவது தோல்வியை கொடுத்துள்ளார்கள்... காங்கிரசால் முடியாததை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முடித்துக் காட்டி இருக்கிறது என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அப்பாவு தனது எக்ஸ் தளத்தில், “நீட் தேர்வுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்த போராட்டத்தில் தன் எழுச்சியுடன் கலந்து கொண்ட மாணவர்களையும், இளைஞர்களையும் பார்த்து மிரண்டு போன பிரதமர் மோடி அவர்கள் பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற அண்டை நாடுகளில் ஏற்பட்ட நிலை நமக்கும் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகச் செய்துள்ளார். தேர்தல் வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்பமை ஜெயச்சந்திரன் அவர்கள் உச்ச நீதிமன்றம் இதுபோன்ற வழக்குகளில்  பத்து ஆண்டுகளுக்கு மேல் கால தாமதமாதப் படுத்துவது  நமது  அண்டை நாடுகளைப் போல் Gen z இளைஞர்கள் கொதித்தெழும் சூழ்நிலை ஏற்படும் என்று ஏற்கனவே எச்சரித்து இருந்ததை தற்போது நினைவு படுத்த விரும்புகிறேன்.

விவசாயிகள் தொடர் போராட்டத்தை  தொடர்ந்து மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று முதல் தோல்வியைத் தழுவினார் பாரத பிரதமர்,   தொகுதி மறு வரையறை மசோதாவில் முன்னாள் முதல்வர் முகஸ்டாலின் எடுத்த முன் முயற்சி அம்மசோதா தோற்கடிக்கப்பட்டு பாரத பிரதமருக்கு இரண்டாவது தோல்வியை கொடுத்தது. இப்போது #GenZ இளைஞர்கள் மோடிக்கு மூன்றாவது தோல்வியை கொடுத்துள்ளார்கள்... காங்கிரசால் முடியாததை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முடித்துக் காட்டி இருக்கிறது. ஆனாலும்
நீட் தேர்வை ரத்து செய்வது தான் நிரந்தர தீர்வு...  இத்தனையும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் தமிழக முதல்வரே,  உங்களுக்கும் மிக விரைவிலேயே தமிழக மக்கள் இதுபோல்  தக்க பாடம் புகட்டுவார்கள் #CMsir ?” எனக் குறிப்பிட்டுள்ளார்.