உங்கள் மாமி ஆட்சி தொடர வேண்டுமா CM சார்? - அப்பாவு

 
அப்பாவு

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த பின் கொலை ,கொள்ளை, பாலியல் கொலை மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை அதிகரிக்க உங்களின்  இயலாமையே காரணம் என்பது உங்களுக்கு தெரியுமா CM சார்? என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அப்பாவு தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த பின் கொலை ,கொள்ளை, பாலியல் கொலை மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை அதிகரிக்க உங்களின்  இயலாமையே காரணம் என்பது உங்களுக்கு தெரியுமா CM சார் ? தமிழக உளவுத்துறையின் மூலம் உங்கள் கவனத்திற்கு வரும் தகவல்களை  தட்டிக் கழிப்பதால், உங்களோடு இருப்பவர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப  #காவல்துறையை-#ஏவல்துறையாக பயன்படுத்துவதால்,   மாணவர்கள் மற்றும் இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி தமிழக சட்டம் ஒழுங்கை  தள்ளாடவைத்து விட்டீர்களே CM சார்.

உதாரணமாக போதை பொருள்விற்பனையாளர்களை  காவல்துறைக்கு அடையாளம் காட்டிய #கோவை அமுதன், #திருவெற்றியூர் தினேஷ்,   சென்னை #கோயம்பேடு யான்சி, #ராஜபாளையம் மணிகண்டன் மற்றும் பலர் கொடூரமாக #கொலை செய்யப்பட்ட சம்பவங்களை திசை திருப்பி #கோஷ்டி மோதல் என்று காவல்துறை தயார் செய்த அறிக்கையை சட்டமன்றத்தில் தனக்குப் பதிலாக பிற அமைச்சர்களை வாசிக்க வைத்திருப்பது, போதை பொருள்  விற்பனையாளர்களை தண்டிப்பதற்கு பதிலாக ஊக்கப்படுத்தும் உங்கள் செயலால், தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களை பேரழிவிற்கு  கொண்டு செல்கிறீர்களே! உங்கள் மாமி ஆட்சி தொடர வேண்டுமா #CM சார்? ” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.