அரசியல் பேச்சு: இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

 
ழ்ச்

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும்9 நாட்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் அனல் பறக்க பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

முதலமைச்சர் குறித்து அவதூறு; ஈபிஎஸ், அண்ணாமலை மீது வழக்கு பதிவு - ஸ்டாலின்  அதிரடி முடிவு! - தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின்: நான் உயிரோடு இருக்கும் வரை, திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட்டுப் பார்க்கும் தைரியம் உண்டா? தமிழ்நாடு பலர் கண்ணை உறுத்துகிறது; தைரியமிருந்தால் தட்சிண பிரதேசம் என மாற்ற முடியுமா?

அப்பாவு, சபாநாயகர்: எனக்கு ஓட்டு போட்டா போடுங்க; இல்லைனா போடாதீங்க; அது உங்க விருப்பம்; ஆனா என்னை ஒட்டு கேட்க கூடாதுனு சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.

எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலினுக்கு மறதி அதிகம்; அதனால்தான் இது டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்குமான தேர்தல் என்கிறார். ஸ்டாலினுக்கு தெம்பு இருந்தால் நிர்வாகம் பற்றி பேசுவார்; அதற்கு நானும் பதிலளிப்பேன்.

அன்புமணி: நாடாளுமன்ற தேர்தலில்தான் திமுகவிற்கும் பாஜகவிற்கும் போட்டி; ஆனால் இது சட்டமன்றத் தேர்தல்; இதில் திமுகவுக்கும் அதிமுக கூட்டணிக்கும்தான் போட்டி. ஆனால், ஸ்டாலின் வேண்டுமென்றே எப்போது பார்த்தாலும் பிஜேபி பிஜேபி என்று விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்.

அண்ணாமலை: தேர்தல் களம் இருமுனைப் போட்டியாக மாறிக்கொண்டிருக்கிறது; ஆட்சிக்கு எதிரான அலை மிகப்பெரிய அலையாக இருக்கிறது. இமாலய வெற்றியை நோக்கி NDA நகர்ந்து கொண்டிருக்கிறது.

திருமாவளவன்: எடப்பாடி பழனிசாமி அவர்களே, பாஜக உடன் கூட்டணி அமைத்ததற்கு ஒரே ஒரு நியாயமான காரணத்தை உங்களால் சொல்ல முடியுமா? 21ஆம் தேதி வரை தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இருக்கிறது; அதற்குள் ஒரே ஒரு முறையாவது அந்த காரணத்தை விளக்கிச் சொல்லுங்கள் பார்ப்போம்.

சீமான்: எல்லா மாநிலத்திலும் கள் இருக்கிறது; இந்த மாநிலத்தில் மட்டும் கள் ஏன் இல்லை? ஏனெனில் டாஸ்மாக் மதுபான ஆலை விற்பனை குறைந்து விடும்; இதை யாராவது கேட்குறீர்களா?