#EXITPOLL தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கப்போவது யார்?- வெளியான பகீர் முடிவுகள்

 
ச்

நான்கு முனைப் போட்டி நிலவிய தமிழ்நாட்டில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், திமுகவே மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்பது தெரியவந்துள்ளது. சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ் நிறுவனம் நடத்திய வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவின்படி, திமுக 145-160 இடங்களிலும், அதிமுக 50-65 இடங்களிலும், தவெக 13-18 இடங்களில் பிற கட்சிகள் 5-8 இடங்களிலும் வெல்லும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 234 தொகுதிகள் உள்ள நிலையில், பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவை.


மேலும் பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, திமுக 125-145 இடங்களிலும், அதிமுக 65-80 இடங்களிலும், தவெக 18-24  இடங்களில் பிற கட்சிகள் 2-6 இடங்களிலும் வெல்லும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 234 தொகுதிகள் உள்ள நிலையில், பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவை.