தமிழ்நாட்டில் ஏப்ரல் 15-க்குள் தேர்தல்?- பாஜக கூட்டத்தில் தகவல்

 
அச்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 15க்கு பிறகு தொண்டர்கள் மற்ற வேலைகளை பார்க்கலாம் என பாஜக பொதுச்செயலாளர் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

Image

சென்னையில் நடைபெற்ற பாஜக வெளிமாநில பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய பாஜக பொதுச்செயலாளர் சந்தோஷ், “தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேலாக பிற மொழி பேசும் மக்களை கவர வியூகம் தேவை. தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகாவில் சிறப்பாக செயல்பட்டவர்கள், தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்படுவர். தமிழ்நாட்டில் ஏப்ரல் 15க்கு பிறகு தொண்டர்கள் மற்ற வேலைகளை பார்க்கலாம். அதுவரை தேர்தல் வேலைகளை பார்க்க வேண்டும்” என்றார். 

முன்னதாக இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், வரவிருக்கும் 2026 தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அவர்களுடன் ஆலோசனைகளை பகிர்ந்துகொண்டார்.