தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 2,396 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 56,845 ஆக உயர்வு!!

 

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 2,396 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 56,845 ஆக உயர்வு!!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 87 லட்சத்து 90ஆயிரமாக அதிகரித்துள்ளது. 4லட்சத்து 63 ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் நேற்று வரை சுமார் 54,449 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 2,396 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 56,845 ஆக உயர்வு!!

இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 2,396பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56,231 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 33,231பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,61,211 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 1,499 பேர் ஆண்கள், 897பேர் பெண்கள். 85பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன. இன்று மட்டும் 38பேர் உயிரிழந்தனர். 14பேர் தனியார் மருத்துவமனையிலும், 24 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 704ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,045பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31,316ஆக அதிகரித்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.