தமிழ்நாட்டில் இன்று 49 பேருக்கு கொரோனா

 
corona

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினசரி பாதிப்பு 44 ஆக இருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. 

corona

தமிழ்நாட்டில் கடந்த 4 மாதங்களாக கொரோனா பாதிப்பு சற்று கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 284 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 34 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக கோவையில் 9 பேருக்கும், சென்னை மற்றும் சேலத்தில் தலா 7 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திருப்பூரில் 3 பேருக்கும் நாமக்கல்லில் 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  செங்கல்பட்டு, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், நாகை, நீலகிரி, பெரம்பலூர், திருநெல்வேலி, திருச்சி, வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.