முத்துராமலிங்க தேவரின் உருவச் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை!
தேவர் குருபூஜையை முன்னிட்டு முத்துராமலிங்க தேவரின் உருவச் சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஆங்கிலேயரை எதிர்த்து நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பியவர் முத்துராமலிங்க தேவர். அவரது குருபூஜை ஆண்டு தோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இதேபோல் முத்துராமலிங்க தேவரின் சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தேவர் குருபூஜையை முன்னிட்டு முத்துராமலிங்க தேவரின் உருவச் சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில், உள்ள முத்துராமலிங்க தேவரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.

