#TN BUDGET : அரசு பள்ளிகளில் சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்படும்..!
அரசுப்பள்ளிகளில் தூய்மையான மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வது மாணவர்களின் நலனுக்கு அவசியமானதாகும் . சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது . இத்திட்டத்தின் கீழ் தூய்மைப் பணிகள், கழிவறை பராமரிப்பு, பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் சூப்பர் சேப்ப்டி திட்டம் முதற்கட்டமாக 10 ஆயிரம் பள்ளிகளில் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் மரியவில்சன் அறிவித்தார். இதற்காக 2026-2027-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 139 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
பெருந்தலைவர் காமராஜர் சிறப்பு பள்ளிகள் திட்டத்தின் கீழ் பள்ளிகளின் உட்கடமைப்புகளை மேம்படுத்த ரூ.125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டும் என்றும் அறிவித்தார்.
பள்ளிப் பாடத்திட்டதை மறுசீரமைப்பு செய்ய ரூ. 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். 3714 பள்ளிகளை நவீனமயமாக்கக ரூ 2,132 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் மரியவில்சன் அறிவித்தார்.
பள்ளிகளில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

