#TN BUDGET : கிராமப்புற பெண்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக கறவை மாடுகள் - பட்ஜெட்டில் அறிவிப்பு..!!

 
1

10 ஆயிரம் பெண்களுக்கு ஆண்டுதோறும் இலவசமாக கறவை மாடுகள் வழங்கப்படும்.
கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை- ரூ.4880 கோடி ஒதுக்கீடு
கால்நடைகள் காப்போம் திட்டம் - ரூ.31 கோடி, 
ஆழ்கடல் மீன்பிடித் தொழில் ஊக்குவிப்பு - ரூ.12 கோடி ஒதுக்கீடு


அண்ணனின் சீர் திட்டம் மூலம் பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயமும் பட்டுப் புடவையையும் முதல்வர் விஜய் வழங்கவிருக்கிறார். இதற்காக 812 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு .

12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும். மூத்த குடிமக்களுக்கு பொழுதுபோக்கு மையங்கள் அமைக்கப்படும். நூலகம், யோகா, தியானம், உள்ளரங்க விளையாட்டு வசதிகள் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் அமைக்கப்படும். ரூ.33 கோடி நிதி ஒதுக்கீட்டில் நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.

அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களை அதிகரிக்க தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அமல்படுத்தப்படும். இதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ. 560 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

புதிதாக 500 அங்கன்வாடி மையங்களை கட்டப்படும். 3-ம் பாலினத்தவர்களுக்கு தொழிற்பயிற்சி மற்றும் தொழில் தொடங்க அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் மானியத்துடன் கடன் வழங்கப்படும். மூன்றாம் பாலினத்தவர்களுக்காக 5 மாவட்டங்களில் அறன் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்படும்.

சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 9,818 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் மரியவில்சன் அறிவித்தார்.