TN BUDGET 2026-27 : ஒரு ரூபாயில் அரசின் வரவு எவ்வளவு, செலவு எவ்வளவு?

 
1

2026-27 ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார். இந்நிலையில், இந்த பட்ஜெட் குறித்த குடிமக்களுக்கான கையேட்டை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில் பொதுமக்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் வரவு-செலவுத் திட்டங்கள் விளக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு ரூபாய் எவ்வாறு திரட்டப்படுகிறது, எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

செலவு விபரங்கள்

  • உதவித் தொகைகளும் மானியங்களும்: 33.2 பைசா
  • ஊழியர்களின் சம்பளங்கள்: 17.3 பைசா
  • வட்டி செலுத்துதல்: 15 பைசா
  • மூலதனச் செலவு: 10.9 பைசா
  • கடன்களை திருப்பிச் செலுத்துதல்: 9.9 பைசா
  • ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்கள்: 8.0 பைசா
  • செயல்பாடுகளும் பராமரிப்புகளும்: 3.8 பைசா
  • கடன் வழங்குதல்: 1.9 பைசா


ஒரு ரூபாய் எவ்வாறு திரட்டப்படுகிறது?

  • பொதுக்கடன் - 33.1%
  • கடன் வசூல் மற்றும் மூலதன வரவு - 0.1%
  • ஒன்றிய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள்    -6.3%
  • ஒன்றிய வரிகளின் பங்கு - 11.9%
  • மாநிலத்தின் சொந்த வரி வருவாய்    43.3%
  • மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் - 5.3%