மாவீரன் பெரும்பிடுகு முத்தரையர் வீரத்தையும் கொடை சிறப்பையும் போற்றி வணங்குவோம் - அண்ணாமலை

 
Annamalai

தமிழின் சிறப்புக்களை கல்வெட்டுக்களில் பதித்து காலத்திற்கும் நிலைபெற செய்த நிகரில்லா மாவீரன் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் வீரத்தையும் கொடைச் சிறப்பையும் போற்றி வணங்குவோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் (705 கிபி -745 கிபி) தஞ்சாவூர் , திருச்சி , புதுக்கோட்டை , பெரம்பலூர் , திருவாரூர் ஆகிய பகுதிகளை பல்லவ வம்சத்தின் நிலப்பிரபுவாக ஆட்சி செய்தார் . அவர் இரண்டாம் நந்திவர்மனின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டார். முத்தரையர் பிறந்தநாள் விழாவை ஆண்டுதோறும் அனைத்து மக்களும், உள்ளூர் அரசியல்வாதிகளும் கொண்டாடி வருகின்றனர். திருச்சியில் அவரது நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதேபோல் அவரது பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், மற்றும் பிரபலங்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாளையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்டு, பெரும் போர்களில் வென்று, பொற்கால ஆட்சி தந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1348 ஆவது சதய விழா இன்று விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.தமிழ் மொழியைக் காப்பதிலும், தமிழின் சிறப்புக்களைக் கல்வெட்டுக்களில் பதித்து காலத்திற்கும் நிலைபெறச் செய்த நிகரில்லா மாவீரன் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் வீரத்தையும் கொடைச் சிறப்பையும் போற்றி வணங்குவோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.