பா.ஜ.கவின் போராட்டம் வருகின்ற காலத்தில் இன்னும் தீவிரமாகும் - அண்ணாமலை பேட்டி

 
annamalai

பா.ஜ.கவின் போராட்டம் வருகின்ற காலத்தில் இன்னும் தீவிரமாகும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தை கண்டித்து இன்று சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அண்ணாமலை அறிவித்தார்.  சாட்டையால் தன்னைத்தானே அடித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ஏற்கனவே அறிவித்தது போல சாட்டையால் தன்னை தானே அடித்து போராட்டத்தில் ஈடுபட்டார். திமுகவை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை செருப்பு அணிய மாட்டேன் எனவும் சபதம் எடுத்துள்ளார். 

annamalai

இந்த நிலையில், பா.ஜ.கவின் போராட்டம் வருகின்ற காலத்தில் இன்னும் தீவிரமாகும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்துள்ளது. தமிழ் மண்ணின் மரபுப்படி பா.ஜ.க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பா.ஜ.க நிர்வாகிகள் யாரும் இது மாதிரி செய்ய மாட்டார்கள். பா.ஜ.க தொண்டர்கள் அறவழியில் போராட வேண்டும். வெற்றி தோல்வியை தாண்டி தமிழ் சமுதாயத்தை சீர்திருத்தவே பாஜக போராடுகிறது. லண்டன் பயணத்திற்கு பிறகு என் பாதை தெளிவாக ஆரம்பித்துள்ளது. லண்டன் பயணத்திற்கு பிறகு, எனக்கு அரசியலில் நிறைய புரிதல் ஏற்பட்டுள்ளது என கூறினார்.