யார் அந்த ரத்தீஷ்? துபாய்க்கு ஓடியது ஏன்?- எரிமலையாய் வெடித்த CM விஜய்

 
ச்

ரத்தீஷ் சொல்படிதான் டாஸ்மாக் எம்.டி.யே செயல்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை சொல்லி இருக்கிறது. யார் இந்த ரத்தீஷ், இவர் யாருக்கு நெருக்கமானவர் நம்ம ஆட்சி வந்ததும் இவர் துபாயில் போய் ஒளிந்து கொண்டது ஏன்? என முதலமைச்சர் விஜய் கேள்வி எழுப்பினார்.

Image

சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், “அதாங்க ரத்தீஷ்ன்னு ஒருத்தர், பல ஆபீசர்களோட டிரான்ஸ்பரை, குறிப்பா டி.ஆர்.ஓ லெவல் ஆபீசர்களோட டிரான்ஸ்பரை எல்லாம் டிசைட் பண்ணிருக்காரு.இவரப் பத்தி சொல்லும்போது, 'A central figure operating as an unauthorized power broker' எவ்வளவு பெருமையா சொல்லிருக்காங்க பாருங்க. இந்த ரத்தீஷ் உத்தரவின்படிதான் அப்ப Tasmac MD-யா இருந்த IAS ஆபீஸரே செயல்பட்டார்னு ED சொல்லிருக்கு. யாரு இந்த ரத்தீஷ்? யாருக்கு நெருக்கமானவரு? நம்மளுடைய அரசு வந்ததுக்கு அப்புறம் இவரு ஏன் துபாய்ல போய் ஒழிஞ்சுகிட்டாரு? யாரோட இன்ஸ்ட்ரக்ஷன்ஸ்ல இதெல்லாம் இத்தனை வருஷமா அவரு செஞ்சுகிட்டு இருந்தாரு? பதில் சொல்லுவாங்களா? கடவுளுக்கே வெளிச்சம்” என பேசினார்.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் முன்னாள் மேலாண் இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி விசாகன் ஐஏஎஸ், முன்னாள் மண்டல மேலாளர் ராம துரைமுருகன், செந்தில் பாலாஜி, முன்னாள் அதிகாரிகள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம், செந்தில்பாலாஜியின் உதவியாளர் பாஸ்கர், ரத்தீஷ் ராஜ், மூலனூர் கார்த்தி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. பார் ஓனர்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் அதிகாரிகளுடன் சேர்ந்து ரூ.17.27 கோடி முறைகேடு செய்ததாகவும், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், கரூரில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாகவும்  FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது