ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டம்- விரைவில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார்: அமைச்சர் வன்னி அரசு

 
s

விவிலியத்தில், ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்று சொல்வார்கள். கிறிஸ்தவப் பிரநிதிகள் நேற்று தட்டினார்கள். இன்று தீர்மானம் வந்துவிட்டது என அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, “நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை விசிக சார்பில் வரவேற்கிறோம்., நீட் தேர்வே கூடாது என்பதுதான் தமிழ்நாட்டு நிலைப்பாடு., நீட் தேர்வு என்பது ஒரு உயிர்க்கொல்லி... ஆணவப்படுகொலை தொடர்பான தடுப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதுதான் அனைவரின் நிலைப்பாடு. கடந்த வாரம் இது தொடர்பாக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன். விரைவில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார்.

விவிலியத்தில், ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்று சொல்வார்கள். கிறிஸ்தவப் பிரநிதிகள் நேற்று தட்டினார்கள். இன்று தீர்மானம் வந்துவிட்டது. FCRA- மசோதாவிற்கு எதிரான இந்த தனித் தீர்மானம் சிறுபான்மையினருக்கு ஆதரவான தீர்மானம் நமது அரசு கொண்டுவந்துள்ள இந்த தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம். FCRA அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்றைய கணக்குப்படி 14,430 தொண்டு நிறுவனங்கள் சான்றிதழ்கள் பெற்று இயங்கி வருகின்றன. ஆனால், 22,496 சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 15,230 அமைப்புகளின் சான்றிதழ்கள் காலாவதியாகி விட்டதாக அறிவித்துள்ளனர். மொத்தம் 37,726 நிறுவனங்களின் சொத்துக்களை ஒன்றிய அரசு கையகப்படுத்தப் போகிறது. இதில் பெரும்பாலானவை கிருஸ்துவ சேவை நிறுவங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. மொத்தம் 5743 அமைப்புகள் உள்ளன. 2100 நிறுவனங்களுக்கு மட்டுமே சான்றிதழ்கள் உள்ளன. அதனால் தமிழகம்தான் அதிக பாதிப்பை எதிர்கொள்ளும்” என்றார்.