“TV பார்த்து தெரிந்துகொண்டவர் போல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லை"- செல்வப்பெருந்தகை

 
ச்

தமிழ்நாட்டில் மனு நீதி சோழன் ஆட்சி நடைபெற்று வருகிறது என காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுகை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் உரையாற்றிய காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை, “அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசின் நடவடிக்கை மற்றும் காவல்துறை அணுகுமுறையை மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். இதனை வாக்கு வங்கி அரசியலாக்கி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 
தமிழ்நாட்டில் மனு நீதி சோழன் ஆட்சி நடைபெற்று வருகிறது. தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்ட முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர் இல்லை” என்றார். பேரவையில் செல்வப்பெருந்தகை பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவரைக் குறிப்பிட்டு செல்வப்பெருந்தகை பேசுவதை ஏற்க முடியாது என அதிமுக உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். இதனை கேட்டு உடனே எழுந்த அமைச்சர் துரைமுருகன், “உண்மைக்கு மாறாக பேசினால் உரிமை மீறல் கொண்டு வரலாம். ஆனால், பேசவே கூடாது என சொல்வது தவறு” என்றார்.