"காணாமல் போன மலைகள்" - சட்டப்பேரவையில் புகைப்படத்துடன் அமைச்சர் பிரபு வெளியிட்ட ஆதாரம்
காணாமல் போன மலைகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது வெறும் Sample தான் என ஆதாரத்தை காட்டி அவையில் அமைச்சர் பிரபு அதிரடியாக உரையாற்றினார்.

தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் பிரபு, “காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பை கேள்விப்பட்டிருப்பீர்கள், காணாமல் போன மலைகளை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழ்நாட்டில் பல குன்றுகள் காணாமல் போயுள்ளன. இவை அனைத்தையும் 320 கோடி ஆண்டுகள் பழமையானவை. மனிதர்கள் வருவதற்கு முன்பே, இந்த பூமியில் தோன்றிய குன்றுகள். மனித இனம் தோன்றுவதற்கு முன்பே உருவான சுமார் 300 முதல் 320 கோடி ஆண்டுகள் பழமையான எண்ணற்ற குன்றுகளும் மலைகளும் தமிழ்நாட்டில் காணாமல் போயுள்ளன. தான் காட்டியது ஒரு சிறு மாதிரி மட்டுமே என்றும், மாநிலம் முழுவதும் இயற்கை வளம் சுரண்டப்பட்டதற்கு இதுவே சான்று என்றும் அவர் அவையில் சுட்டிக்காட்டினார்.
காணாமல் போன மலைகள்
பிரம்மரிஷி மலை, பெரம்பலூர் (2006 முதல் காணவில்லை, 3 ஏக்கரில் 25 மீ உயரம் வரை.)
கோனேரிபாளையம் மலை, பெரம்பலூர் (2004 முதல் காணவில்லை 8 ஏக்கர் பரப்பளவில் வெட்டி எடுப்பு..)
செங்குணம் மலை, பெரம்பலூர் (2026 முதல் காணவில்லை, 7 ஏக்கர் பரப்பளவில் 20 மீ.. வெட்டி எடுப்பு)
சர்க்கரை பீர் மலை, மதுரை (2003 முதல் காணவில்லை, 7.5 ஏக்கர் காணவில்லை)
கொண்டையம்பட்டி கிராமம் (குன்று), மதுரை (2021 முதல் காணவில்லை 5 ஏக்கர் வெட்டி எடுப்பு..)
அம்பூர்பேட்டை கிராமம்(குன்று), திருப்பத்தூர்(2024 முதல் காணவில்லை 2 ஏக்கர் வெட்டி எடுப்பு)
அனந்தலை மலை, இராணிப்பேட்டை (1998 முதல் காணவில்லை)
முத்தூர் கிராமம் (குன்று), கோவை 6 மீ உயரம் (2022 முதல் காணவில்லை)
முத்தூர் கிராமம் (குன்று), கோவை 10 மீ உயரம் (2022 முதல் காணவில்லை)
கோண மலை, தென்காசி(1999 முதல் காணவில்லை)

