"அதை open பண்ண வெச்சுராதீங்க...PROOF ஓட இருக்கு!"- முதல்வர் விஜய் எச்சரிக்கை
அமைச்சர்கள் எந்த குற்றச்சாட்டை முன்வைத்தாலும் ஆதாரம் கேட்கிறார்கள். நிதியமைச்சர் 3 துறைகளின் தணிக்கை அறிக்கை என் மேஜையில்தான் உள்ளது என முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், “அமைச்சர்கள் எந்த குற்றச்சாட்டை முன்வைத்தாலும் ஆதாரம் கேட்கிறார்கள். நிதியமைச்சர் 3 துறைகளின் தணிக்கை அறிக்கை என் மேஜையில்தான் உள்ளது. இதை நான் சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், ஆதாரம்.. ஆதாரம் என்று கேட்கிறார்கள். ஒரு வாரத்திற்கு முன்பு நிதியமைச்சர் 3 துறைகளை ஆராய்ந்து அதன் கோப்புகள் என்னுடைய மேசையில் இருக்கிறது என்று கூறினார். அதை அவர் போகிறப் போக்கில் எல்லாம் சொல்லவில்லை. அவை உண்மையில் என் மேசையில்தான் உள்ளன; அத்தனையும் ஆதாரத்தோடு உள்ளன. அதை open பண்ண வெச்சுராதீங்க, எதை எப்போ open பண்ணணுமோ, அது அப்போ open ஆகும். மக்கள் கிட்ட என்ன, எப்போது, எப்படி பேசணும் என எல்லாம் பேசிவிட்டுதான் அவர்கள் எங்களை ஆசையாக இங்கு கொண்டு வந்து உட்கார வைத்துள்ளார்கள். நான் பேசுவேன். பேசக்கூடாது என்றெல்லாம் ஒன்றுமில்லை. இடைத்தேர்தலையாவது சிலருக்கு எதாவது நல்லது நடக்க வேண்டுமல்லவா!” என்றார்.

