யுஜிசி விவகாரம்...முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது
யுஜிசி வரைவு விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.
யுஜிசி விதிகள் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. "தமிழ்நாட்டில் சமூகநீதிக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வலுவான உயர் கல்வி கட்டமைப்பை இந்த வரைவு நெறிமுறைகள் பாதிக்கும் எனவும், அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது யுஜிசி வரைவு நெறிமுறை எனவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், யுஜிசி வரைவு விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவித்தது. பாஜக உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.