இந்தியா கூட்டணியில் திமுக இல்லை - இளங்கோவன்
காங்கிரஸ் உருவாக்கிய இந்தியா கூட்டணியில் நாங்கள் இல்லை என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், “காங்கிரஸ் உருவாக்கிய கூட்டணியில் திராவிட முன்னேற்ற கழகம் இடம்பெறவில்லை. எதிர்கால அரசியல் சூழலில் கூட்டணிகளின் நிலைமைகள் மாறக்கூடும். தேசிய அளவில் புதிய அரசியல் சமநிலையும், ஒரு வலுவான அரசியல் கூட்டணியும் இனி உருவாகும். பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கூட்டணி மறுபடியும் நிச்சயம் உருவாகும். முதலமைச்சர் விஜய் என்ன மாதிரியான அரசை நடத்துகிறார் என்றே தெரியவில்லை. குற்றங்கள் அதிகரித்தும் அவர் அமைதியாக இருக்கிறார். 6 மாதங்கள் பொறுத்திருக்க நினைத்தோம், ஆனால் அவரே தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டு கொள்கிறார். மக்களுக்கு எதிரான இந்த அரசை எப்படி அனுமதிக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

