குடித்து விழுந்து கிடந்தால் சுயமரியாதை இருக்காது- டிகேஎஸ் இளங்கோவன்

 
tks elangovan

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சியில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு இன்று நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்து மகளிர் மற்றும் விசிக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விசிகவின் மாநாட்டில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டுள்ளனர். மகளிரை முன்னிலைப்படுத்தி நடைபெற்ற இந்த மாநாட்டில், 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விசிக மது ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றிய திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், “தமிழ்நாட்டில் இன்றைக்கு மதுவிலக்கு அமல் செய்தால், 70-களில் நடந்ததுபோல நடக்கும். மது குடிக்க ஆந்திராவுக்கும், கர்நாடகத்துக்கும், கேரளாவுக்கும், புதுச்சேரிக்கும் செல்வார்கள். ஆகவே தேசிய அளவில் மதுவிலக்க கொள்கையை அறிவித்து ஒன்றிய அரசு அதனை அமல்படுத்த வேண்டும். குடித்து விழுந்து கிடந்தால் சுயமரியாதை இருக்காது. சுயமரியாதை போய்விடும். சுயமரியாதையுடன் வாழ போதைப் பழக்கத்தில் இருந்து வெளிவர வேண்டும். மது மற்றும் போதைக்கு அடிமையாகாமல் நாம் வாழ வேண்டும். 

குடிப்பதனால் வரும் தீமைகளை ஒவ்வொருவரிடமும் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும். குடிப்போரின் அறிவை மழுங்க செய்ய வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும். அகில இந்திய அளவில் மது ஒழிப்பை அறிவித்து நடைமுறை படுத்த வேண்டும்” என்றார்.