பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு பத்திரப்பதிவு

 
ச் ச்

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடரும் நிலையில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு பத்திரப்பதிவு தொடங்கியுள்ளது.


பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடரும் நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைக்க அரசுக்கு நிலத்தை தர சம்மதம் தெரிவித்து 5 கிராமங்களை சேர்ந்த 19  நில உரிமையாளர்கள் நிலம் வழங்கியுள்ளனர். ரூ.9.22 கோடி மதிப்புடைய நிலத்திற்கு பத்திரப்பதிவு இன்று தொடங்கியது. இரண்டு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு இன்று நடைபெற்று முடிந்தது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்திற்கு பத்திரப் பதிவு செய்து கொடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு நடைபெற்றது. பத்திரப்பதிவு செய்தால் 24 மணி நேரத்தில் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.