மின்னொளியில் மின்னும் திருவண்ணாமலை திருக்கோயில்

 
thiruvannamalai

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், வருகின்ற 26ம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ள நிலையில், இன்று நவகோபுரங்களும் மின்னொளியில் மின்னுகின்றன. 

நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்ச பூத தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் வருகின்ற நவம்பர் 17-ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து  26-ம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையினுள் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும்,அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணி அளவில் திருக்கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற விழாவில் ஒன்றாக கருதக்கூடிய அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளது. தீபத் திருவிழாவிற்காக பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திருக்கோவில் சார்பில் திருக்கோவிலில் உள்ள ராஜ கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் உள்ளிட்ட  9 கோபுரங்களுக்கும் வண்ண விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று முடிந்த நிலையில், அண்ணாமலையார் திருக்கோவில் உள்ள 9 கோபுரங்களும் அமாவாசை தினமான இன்று மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு 9 கோபுரங்களும் மின்னொளியில்  ஜொலிக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. இரவு நேரங்களில் மின்னொளியில் நவ கோபுரங்களும் காட்சி அளித்து வருவது பக்தர்கள் மனதை மெய்சிலிர்க்க வைக்கிறது.

இதனைத் தொடர்ந்து வருகின்ற 14ஆம் தேதி நகர காவல்தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.