திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!!

 
tn

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

thiruvannamalai

உலக பிரசித்திபெற்ற திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோயில்,  பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. நாள்தோறும்  இந்த கோயிலுக்கு  உள்ளூர் மட்டுமின்றி , வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்வர்.  ஒவ்வொரு மாதம் பௌர்ணமியின் போதும், ஏராளமான பக்தர்கள் கிரிவலம்  செல்வர். அருணாச்சலேஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள மலையை, சிவனாக எண்ணி வழிபடுவதால் அந்த மலை அண்ணாமலை என்று  அழைக்கப்படுகிறது. இந்த மலையை சுற்றி 14 கி.மீ தொலைவு பாதையில் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.   மாதமாதம் பௌர்ணமி நாளில் கிரிவலம் செல்றாலும்,  கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பௌர்ணமியன்றும் கிரிவலம் செல்வது சிறப்பு மிக்கதாக பார்க்கப்படுகிறது.  இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். 

சித்ரா பௌர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம்

இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது.  நவம்பர் 26 ம் தேதி காலை கோவிலில் கருவறையின் முன்பு 4 மணிக்கு பரணி தீபமும் அதனை தொடர்ந்து அன்று மாலை கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீபமலையின் மீது  6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக இந்த ஆண்டு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவிற்காக வரும் ஆன்மீக பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காகவும் அடிப்படை வசதிகளுக்காகவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை கோவில் நிர்வாகம் என பல்வேறு துறையினர் மும்முரமாக பணி செய்து வருகின்றனர்.