திருத்தணியில் வடமாநிலத்தவர் என்பதால் தாக்குதல் என்பது தவறு- ஐ.ஜி. அஸ்ரா கர்க்

 
திருத்தணியில் வடமாநிலத்தவர் என்பதால் தாக்குதல் என்பது தவறு- ஐ.ஜி. அஸ்ரா கர்க் திருத்தணியில் வடமாநிலத்தவர் என்பதால் தாக்குதல் என்பது தவறு- ஐ.ஜி. அஸ்ரா கர்க்

சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி பயணம் செய்த மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி சுராஜ் என்பவரை, திருவாலங்காடு தொடர்வண்டி நிலையத்தில் ஏறிய கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள் அரிவாளால் மிரட்டி, பின்னர் திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் வைத்து கொடூரமாக வெட்டியுள்ளனர். படுகாயங்களுடன் மயங்கிக் கிடந்த இளைஞரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் திருத்தணியில் ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர், சிறார்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கலை சந்தித்த வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க், “டிசம்பர் 27ஆம் தேதி திருத்தணியில் ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது. சென்னையில் இருந்து திருத்தணிக்கு இளைஞர் சென்ற நேரத்தில் 4 சிறுவர்கள் உடனிருந்துள்ளனர். கட்டாயப்படுத்தி ரயிலில் இருந்து இறக்கிவிட்டு 2 பட்டா கத்தி வைத்து அடித்து, அதை ரீல்ஸாக வெளியிட்டுள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட நால்வர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர், புலம்பெயர் தொழிலாளி அல்ல. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் சுற்றி வந்துள்ளார். கைதான நால்வரில் மூவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். ஒருவரை சிறார் நீதிக்குழு அறிவுறுத்தலின்படி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வடமாநிலத்தவர் என்பதால் தாக்கப்பட்டார் என்று கூறுவது தவறு, முறைத்து பார்த்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட நபர் புலம்பெயர் தொழிலாளி இல்லை. 2 மாதங்களாக பல இடங்களுக்கு சென்றுள்ளார். சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறை 109 பி.என்.எஸ்-ல் வழக்கு பதிவு செய்தது. டிசம்பர் 28 ஆம் தேதி சிறுவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறார் இல்லத்தில் அடைக்கப்பட்டனர். இளைஞர்கள் போதைப்பொருள் பயன்படுத்தினார்களா என்று ஆய்வு செய்து வருகிறோம். அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வழிவகை செய்யும் வகையில் சிறுவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது” என்றார்.