சாலையோரம் நின்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு!

 
accident

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, சாலையோரம் நின்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த முருகன் என்பவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக முருகன் ஆம்புலன்ஸில் ஏற்றி கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் முருகனின் மனைவியும் பயணித்துள்ளார்.  19 வயதுள்ள ஓட்டுநர் உரிமம் இல்லாத கவியரசன் என்பவர் ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து கோவை நோக்கி சென்ற ஆம்புலன்ஸ் லாரி மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது. சாலையோரம் நின்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் நோயாளி முருகன், அவரது மனைவி கல்யாணி உயிரிழந்தனர். ஆம்புலன்ஸை ஓட்டிய கவியரசனுக்கு 2 கால்களும் முறிந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.