"ஜனநாயகன் ரிலீஸ் ஆகுற அன்னைக்குதான் பொங்கல்.. எங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு தான்" - திருப்பூர் சுப்பிரமணியம்
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க கோரிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் , “இரண்டு படங்கள் வந்தால் பெரிய பொங்கலா இருக்கும்னு நினைத்தோம். இப்போது ஒரு படம் வருகிறது. தியேட்டர்களில் வசூல் கொஞ்சம் கம்மியா தான் இருக்கும். பொங்கலுக்கு வந்திருந்தால் ஜனநாயகனுக்கு 600, பராசக்திக்கு 400 என ஸ்கிரீன் கிடைத்திருக்கும். ஆனால் ஜனநாயகன் இந்த மாத கடைசியில் வந்தால் தனியாக 1000 ஸ்கிரீன் கிடைத்திருக்கும். இன்னொரு பொங்கல் திருவிழாவாக தான் இருக்கும். ஜனநாயகனுக்கு லீவ் நாட்கள் என்பதே தேவையில்லை எப்போ வந்தாலும் திருவிழாவாகதான் இருக்கும். ஜனநாயகன் ரிலீஸ் ஆகுற அன்னைக்குதான் பொங்கல்.. எங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு தான்.." என்றார்.


