"திருப்பதி செல்பவர்கள் கவனத்திற்கு!" – இன்று 6 மணி நேரம் கோவில் நடை அடைப்பு..!

 
Tirupathi

யுகாதி பண்டிகை (தெலுங்கு வருடப்பிறப்பு) இந்தாண்டு மார்ச் 19ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப் படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யுகாதியை முன்னிட்டு திருப்பதி கோவிலில் யுகாதி அஸ்தனம் உற்சவம் நடைபெறுவதையொட்டி இன்று  (மார்ச் 17ம் தேதி) செவ்வாய்கிழமை ‘கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்’ என்னும் ‘தூய்மைப் பணி’ நடைபெற உள்ளது.

திருப்பதி கோவிலில் இன்று முக்கிய தரிசனங்கள் சில ரத்து செய்யப் படுவதாகவும், அன்றைய தினம் சுமார் 6 மணி நேரம் வரை கோவில் நடை அடைக்கப்பட்டிருக்கும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சார்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.யுகாதி பண்டிகையை முன்னிட்டு “கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்” எனப்படும் பாரம்பரிய தூய்மை பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் சுமார் 6 மணி நேரம் வரை கோவில் நடை மூடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்த தூய்மை நிகழ்வில் கோவிலின் மண்டபங்கள், சுவர்கள் மற்றும் தரைப்பகுதிகள் அனைத்தும் மூலிகை கலவைகளால் சுத்தம் செய்யப்படும். முக்கிய திருவிழாக்களுக்கு முன்பாக கோவில் முழுவதும் சுத்திகரிக்கப்படும் பாரம்பரிய நிகழ்வாக இது நடத்தப்படுகிறது.

இதனை முன்னிட்டு மார்ச் 16 முதல் 19 வரை விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 17ஆம் தேதி அஷ்டதல பாத பத்மாராதனை சேவையும் நடைபெறாது. தரிசன நேரங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதால் பக்தர்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.