லட்டு உற்பத்தியை அதிகரிக்க தானியங்கி இயந்திரத்தை களமிறக்கும் திருப்பதி தேவஸ்தானம்

 
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா: பக்தர்களுக்காக 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் லட்டு பிரசாதம் உற்பத்தியை அதிகரிக்க ரூ.50 கோடி  ஆட்டோமேட்டிக் இயந்திரம் டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார். 

லட்டு தயாரிப்பில் பணியாளர்கள்

திருமலை அன்னமய்யா பவனில் டயல் யுவர் இ.ஒ. நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.  இதில் போனில் பக்தர்கள் பலர் கேட்ட கேள்விகளுக்கு இ.ஒ. பதில் அளித்தார். இதில் காக்கிநாடாவை சேர்ந்த வெங்கட்  எனும் பக்தர் லட்டு தரம் சரியில்லை என தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த செயல் அதிகாரி தர்மா ரெட்டி, “லட்டு தயாரிக்க  தரமான மூலப்பொருட்களை டெண்டர் மூலம் வாங்கி வருகிறோம். தினந்தோறும் உணவு பொருட்கள் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது. 

ஒரு நாளைக்கு 3.5 லட்சம் லட்டு தயாரிக்கப்படுகிறது. அந்த லட்டுகள் சிறிது உலர வைத்தால் அதன் தரம் உயரும், ஆனால் உடனுக்குடன் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் லட்டு பிரசாதம் உலரவைக்க சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும். அப்போது அதன் நிலுவை தன்மை தரம் மேலும் அதிகரிக்கும். லட்டு பிரசாதம் தேவை அதிகரித்து வருவதால் லட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக ரூ.50 கோடியில் ரிலையன்ஸ் உதவியுடன் ஆட்டோமேட்டிக் இயந்திரம் வாங்கப்படுகிறது. 

திருப்பதி

டிசம்பர் மாதத்திற்குள் லட்டு தயாரிக்கும் இந்த இயந்திரம் பயன்பாட்டுக்குவரும். அவை வந்தால் கூடுதலாக 2 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படும்.  இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மேலும் சிறந்த தரத்தை பராமரிக்க வேண்டும் என லட்டு தயார் செய்யும் ஸ்ரீ வைஷ்ண ஊழியர்களுக்கும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.