திருப்பதி: ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான தரிசன டிக்கெட் இன்று வெளியீடு..

 
திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜுலை, ஆகஸ்ட் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ₹ 300 டிக்கெட் இன்று  ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.  

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசன டிக்கெட்டுகள்  தேவஸ்தானம் சார்பில் ஒவ்வொரு மாதமும் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது.   அதன்படி ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 தரிசன  டிக்கெட்கள் இன்று (புதன்கிழமை)  காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. முன்னதாக நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்களும்,  மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மூன்று மாதங்களுக்கு ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான சிறப்பு இலவச டோக்கன்களும் நேற்று வெளியிடப்பட்டது. 

 திருப்பதி

இந்நிலையில் இன்று ஜுலை மற்றும் ஆகஸ்ட்  மாதத்திற்கான ₹ 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.  பக்தர்கள் தங்களுக்கு தேவையான நாளுக்கான டிக்கெட்கள்,  முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tirupatibalaji.ap.gov.in/
அல்லது ப்ளே ஸ்டோரில் TTDevasthanams என்ற    தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியை மட்டும்  பயன்படுத்தி டிக்கெட்  முன்பதிவு செய்யுமாறு தெரிவித்துள்ளது.