"பேரரசர் திருமலை நாயக்கர் ஜெயந்தி நாளில் அவர்தம் புகழை போற்றி வணங்குகிறேன்" - ஈபிஎஸ்

 
EPS

திருமலை நாயக்கர் அவர்களின் ஜெயந்தி நாளில் அவர்தம் புகழை போற்றி வணங்குகிறேன் என்று ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

tn

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைதள பக்கத்தில், சித்திரை திருவிழா தந்த சிறப்புக்குரியவர், அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து மதுரையை விழாநகரமாகவும், கலைநகரமாகவும் மாற்றியமைத்த சமூக சீர்த்திருத்தவாதி, ஆலய திருப்பணிகள் பல செய்த ஆன்மீகவாதி, தென்னகத்தை ஆட்சி செய்த பேரரசர் திருமலை நாயக்கர் அவர்களின் ஜெயந்தி நாளில் அவர்தம் புகழை போற்றி வணங்குகிறேன்.


#மாமன்னர்_திருமலைநாயக்கர் அவர்களின் ஜெயந்தி விழாவினை அரசு விழாவாக அறிவித்தது நமது கழக அரசு என்பதை இந்நேரத்தில் பெருமையுடன் நினைவுகூர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.