“சவுக்கு சங்கர் மண்டையில் இருக்கும் கொண்டையை மறந்து விட்டான்... 27.02.2025 அன்று நடந்த சம்பவம்”

அனைத்தையும் சரியாக பிளான் பண்ணி செய்தவன் மண்டையில் இருக்கும் கொண்டையை மறந்து விட்டான் சவுக்கு சங்கர் என பாஜக முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யா கூறியுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வருபவர் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர். யூடியூபில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், இவருக்கு எதிராக சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, ஜாமின் பெற்று வெளியே வந்த இவர், தொடர்ந்து யூடியூபில் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ பதிவிட்டுவருகிறார். தூய்மைப் பணியாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி இவர் வீட்டின் மீது இன்று (மார்ச் 24) காலை தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டார்.
அனைத்தையும் சரியாக பிளான் பண்ணி செய்தவன் மண்டையில் இருக்கும் கொண்டையை மறந்து விட்டான் @SavukkuOfficial
— Tiruchi Suriyaa (@TiruchiSuriyaa) March 24, 2025
* 27.02.2025 அன்று நடந்த சம்பவம் என்பது சிசிடிவியில் தெளிவாகத் தெரியும் போது இன்று சம்பவம் நடந்தது போல் ஏன் சித்தரிக்க வேண்டும்?
* 19.17 என்று நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது… pic.twitter.com/54TJ3NTq3n
இச்சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், முன்னாள் பாஜக நிர்வாகி திருச்சி சிவா, “அனைத்தையும் சரியாக பிளான் பண்ணி செய்தவன் மண்டையில் இருக்கும் கொண்டையை மறந்து விட்டான் சவுக்கு சங்கர்.
* 27.02.2025 அன்று நடந்த சம்பவம் என்பது சிசிடிவியில் தெளிவாகத் தெரியும் போது இன்று சம்பவம் நடந்தது போல் ஏன் சித்தரிக்க வேண்டும்?
* 19.17 என்று நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது அதாவது மாலை 7.17 அப்போ இவ்வளவு வெளிச்சம் இருக்குமா?
மற்ற பிரச்சனைகளுக்கு அமைதி காக்கும் எடப்பாடி பழனிசாமி. சவுக்கு சங்கருக்கு ஒரு பிரச்சனை என்ற உடன் துடித்துக் கொண்டு கண்டனம் தெரிவிக்கிறார், தொடர்ச்சியாக அண்ணாமலை. அதன் பிறகு கார்த்தி சிதம்பரம். இருவரும் செல்வப்பெருந்தகை மேல் இருக்கும் காழ்ப்புணர்ச்சியை வேறு வகையில் வெளிப்படுத்துகிறார்கள் என்பதே நிதர்சனம். அனைத்தும் அரசியலே” எனக் குறிப்பிட்டுள்ளார்.