எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டை? அண்ணாமலைக்கு திருச்சி சூர்யா கேள்வி
தமிழ்நாட்டில் குற்ற சம்பவம் எதுவும் நடைபெற்றால் சந்தேகமே வேண்டாம் கண்டிப்பாக அந்த சம்பவத்தை சார்ந்தவன் பாஜக உறுப்பினராக தான் இருப்பான் என்று சொல்லும் அளவுக்கு கட்சியை வளர்த்திருக்கிறார் அண்ணாமலை என அண்மையில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருச்சி சூர்யா தனது எக்ஸ் தளத்தில், “தஞ்சை ஒரத்தநாடு அருகே பட்டதாரி பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்தியதோடு மட்டுமில்லாமல், தன்னுடைய நண்பர்கள் மூலம் வீடியோ எடுத்து மிரட்டி கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அதில் A1 கவிதாசன் (25) என்ற ’காவி படையின் காவிய தலைவனின்’ அன்பு தம்பி கைது செய்யப்பட்டுள்ளான்.
அண்ணாமலை திமுக நிர்வாகி என தவறான தகவலை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன்பே திமுகவிலிருந்து விலகிய நபர், அதற்கு பிறகு அதிமுகவிலும் இணைந்து செயல்பட்டிருக்கிறான் மூன்றாண்டுகளுக்கு முன்பு பாஜகவில் சேர்ந்ததற்கு பிறகு இப்படி செய்கிறான் என்றால், அ.மலையின் ‘வீடியோ போதை கலாச்சாரம்’ எந்தளவுக்கு இளைஞர்களை சீரழித்திருக்க வேண்டும்.
எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டை? @annamalai_k
— Tiruchi Suriyaa (@TiruchiSuriyaa) August 15, 2024
தஞ்சை ஒரத்தநாடு அருகே பட்டதாரி பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்தியதோடு மட்டுமில்லாமல், தன்னுடைய நண்பர்கள் மூலம் வீடியோ எடுத்து மிரட்டி கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அதில் A1 கவிதாசன்… pic.twitter.com/LuyjBGZs7S
தேவநாதனின் பண மோசடிக்கு முட்டு கொடுத்த அண்ணாமலை, இப்போது பாலியல் குற்றத்தை மற்றொரு கட்சியின் மீது கலங்கத்தை கற்பித்து, குற்றவாளியை தப்பிக்க வைக்க பார்க்கும் கேவலமான செயல் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் குற்ற சம்பவம் எதுவும் நடைபெற்றால் சந்தேகமே வேண்டாம் கண்டிப்பாக அந்த சம்பவத்தை சார்ந்தவன் பாஜக உறுப்பினராக தான் இருப்பான் என்று சொல்லும் அளவுக்கு கட்சியை வளர்த்திருக்கிறார் அண்ணாமலை” எனக் குறிப்பிட்டுள்ளார்.