"பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை திமுக ஆதரிக்கிறது"- திருச்சி சிவா

 
 திருச்சி சிவா எம்.பி.

தொகுதி மறுவரையறை மசோதாவில் திமுகவின் நிலைப்பாடு குறித்து எம்பி திருச்சி சிவா விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லியில் நடந்த நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, “தொகுதி மறுவரையறை குறித்து அரசு தெளிவான வழிமுறையை வெளியிட வேண்டும். தென் மாநிலங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் வகையில் மசோதா இருந்தால் கண்டிப்பாக எதிர்ப்போம். தற்போது உள்ள தொகுதி எண்ணிக்கையின் படி பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை திமுக ஆதரிக்கிறது. தொகுதி மறுவரையறை குறித்து மேலும் தெளிவு வேண்டும். வரைவு மசோதாவை பார்த்த பின்னரே இறுதி நிலைப்பாடு.  பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை உடனே கொண்டு வர வலியுறுத்தப்படும். உயர்க்கல்வி திருத்த மசோதா கொண்டுவரப்படும்போது அதனை நிச்சயமாக எதிர்ப்போம். நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் இருக்கைகளை மாற்றித்தர சபாநாயகரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். திமுகவின் கோரிக்கையை ஏற்று சபாநாயகர் எங்களின் இருக்கைகளை மாற்ற ஒப்புதல் அளித்துள்ளார். மேகதாது பிரச்சனையை நாளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக எழுப்பும்” என்றார்.