குறைந்தது தங்கம் விலை - விலை நிலவரம் இதோ!!

 
gold

ஒரே நாளில் ரூ.1,240 உயர்ந்த தங்கம் விலை இன்று தங்கம் விலை ரூ.160 குறைந்தது. 

gold 

நாடு முழுவதும் நேற்று அட்சய திருதியை கொண்டாடப்பட்டது. இந்த நாளில்  ஏராளமானோர் தங்கம் மற்றும் தங்க நகைகளை வாங்குவர்.  அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 3 முறை தங்கம் உயர்ந்தது. நேற்று  ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,240 உயர்ந்து ரூ.54,160-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,770 -க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி நேற்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 14 ஆயிரம் கோடி தங்கம் விற்பனையாகியுள்ளது. 

gold

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,000க்கு விற்பனையானது . கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,750க்கு விற்பனை செய்யப்படுகிறது.