#JUST IN : திண்டிவனம் வி.சி.க எம்.எல்.ஏ. வன்னி அரசு அமைச்சராகிறாரா..??

 
Q

தமிழகத்தில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் த.வெ.க ஆட்சி அமைந்துள்ளது. இந்த வாரத்தில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற உள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு இணைய வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்துள்ளார்.

 

இந்நிலையில் திண்டிவனம் தொகுதி வி.சி.க எம்.எல்.ஏ. வன்னி அரசு அமைச்சராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க அமைச்சரவையில் வி.சி.க.வுக்கு ஒரு இடம் வழங்க முடிவு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி அரசுவுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.