டைம் ஓவர்... தாமதமாக வந்த 4 மாணவர்களை நீட் தேர்வு எழுத அனுமதி மறுப்பு..!
நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 3-ஆம் தேதி நடைபெற்றது. இதற்கிடையே, நீட் வினாத்தாள் கசிந்ததால் மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வு செய்யப்பட்டு, நீட் மறுதேர்வு நேற்று நடைபெற்றது.தமிழகத்தில் மொத்தம் 1.42 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். சென்னையில் 22 ஆயிரம் மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர்.
நீட் தேர்வு பிற்பகல் 2 மணி தொடங்கி மாலை 5:15 மணி வரை நடைபெற்றது. முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக 15 நிமிடங்கள் கூடுதலாக நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நான்கு மாணவர்கள் 1.30 மணிக்குப் பிறகு சில நிமிடங்கள் தாமதமாக வந்ததால் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் உள்ளே அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதன் பிறகும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் நான்கு மாணவர்களும் நுழைவு வாயிலுக்கு வெளியே சோகத்துடன் நின்று கொண்டிருந்தனர்.
அதே போல் மற்றுமொரு சம்பவம் நடைபெற்றது.நீட் தேர்வெழுத பள்ளி சீருடையில் வந்த மாணவிகளிடம் மேல்கோட் போட்டு செல்ல அனுமதி இல்லை எனக்கூறி அனுமதி மறுத்த தேர்வு மைய அலுவலர்கள்.. கடந்த முறை தேர்வெழுத இதே சீருடையில் சென்றதாக பெற்றோர் தெரிவித்த நிலையில் சிறிது நேரம் காக்கவைத்து உள்ளே அனுமதி.
”உள்ளே அனுமதி இல்லை.. டைம் ஓவர்” நீட் தேர்வெழுத நேரம் முடிந்தபிறகு வந்த மாணவிக்கு அனுமதி மறுப்பு.. கடைசி நேரத்தில் அவசர அவசரமாக வந்த மாணவிகளை கடகடவென ஆய்வு செய்து அனுப்பிய போலீசார்.!#Virudhunagar | #NEET | #Police | #Student | #PolimerNews pic.twitter.com/kSQ0Bm1InA
— Polimer News (@polimernews) June 21, 2026

