#BREAKING தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு

 
Diwali Diwali

தீபாவளி தினத்தன்று காலை  6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Diwali fireworks restricted to just two-hour window; only specific  firecrackers allowed to be burst - KERALA - GENERAL | Kerala Kaumudi Online

சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் நடப்பு ஆண்டு  உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள், இந்தியா மற்றும்  உலக நாடுகள் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்ட விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, பட்டாசு வியாபாரம் மும்மரமாக நடந்து  வருகிறது. இந்நிலையில் நடப்பு மாதம் 19 ஆம் தேதி திங்கட்கிழமை  தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை தொடர்ந்து 4- நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தீபாவளியை பொதுமக்கள் அனைவரும்  குதூகலமாக கொண்டாட கால அவகாசம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி அன்று, 2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தீபாவளி தினத்தன்று காலை  6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.