டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா, காதலன் கைது!

 
சூர்யா

சமூக ஊடகங்களில் ஆபாசமாக பேசி வந்த ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிக் டாக் 'ரவுடி பேபி' சூர்யா தூக்கிட்டு தற்கொலை முயற்சி!

பிரபல சமூக வலைதளமான யூடியூபில் ரவுடி பேபி சூர்யா, திவ்யா, ஜி.பி முத்து, திருச்சி சாதனா உள்ளிட்ட டிக்டாக் பிரபலங்களின் ஆபாச பேச்சு வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இவர்களின் சமூக வலைதளங்கள பக்கங்களை முடக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துவருகிறது. முன்னதாக திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் அடுத்த அய்யம்பாளையத்தை சேர்ந்த சுப்புலட்சுமி, ரவுடி பேபி சூர்யா என்ற பெயரில், குறவர் உள்ளிட்ட இனத்தவரை இழிவாக பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார், வுடி பேபி சூர்யா மற்றும் அவரது காதலன் ஆகியோர் கைது செய்தனர்.  மதுரையில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்த தனிப்படை பிரிவு போலீசார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்