ரயில்வேயில் Ticket Clerk வேலை..! 12வது தேர்ச்சி போதும்..!

 
1

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (Railway Recruitment Boards – RRB) சார்பில் RRB NTPC Under Graduate Level Recruitment 2026 ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 1,688 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இந்த ஆட்சேர்ப்பில் Commercial Cum Ticket Clerk, Accounts Clerk Cum Typist, Junior Clerk Cum Typist மற்றும் Trains Clerk உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாதம் ₹21,700 வரை அடிப்படைச் சம்பளம் வழங்கப்படும்.

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 15.10.2026 முதல் 13.11.2026 வரை RRB-யின் அதிகாரப்பூர்வ விண்ணப்ப இணையதளமான “rrbapply.gov.in” (https://www.rrbapply.gov.in/) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.இந்த ரயில்வே வேலைவாய்ப்புக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? பதவி வாரியான கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? சம்பள விவரங்கள் என்ன? விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு? தேர்வு முறை எப்படி இருக்கும்? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? உள்ளிட்ட RRB NTPC 12th Level Recruitment 2026 தொடர்பான முழுமையான தகவல்களை பார்க்கலாம்.

RRB NTPC Under Graduate Level Recruitment 2026 – முக்கிய விவரங்கள்

விவரம் தகவல்
துறை Central Government Job
மத்திய அரசு வேலை 2026
அமைப்பு Railway Recruitment Board (RRB)
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
ஆட்சேர்ப்பு RRB NTPC Under Graduate Level Recruitment 2026
அறிவிப்பு எண் 07/2026
மொத்த காலியிடங்கள் 1688
பணிகள் Commercial Ticket Clerk, Accounts Clerk, Junior Clerk மற்றும் Trains Clerk
கல்வித் தகுதி 12ஆம் வகுப்பு தேர்ச்சி
பணியிடங்கள் இந்தியா முழுவதும்
சம்பளம் ₹21,700 சம்பளம்
விண்ணப்ப முறை ஆன்லைன் மூலம்
விண்ணப்ப தொடக்கம் தேதி 15.10.2026
கடைசி தேதி 13.11.2026 at 11.59 PM
அதிகாரப்பூர்வ இணையதளம் rrbapply.gov.in

காலியிட விவரம் : 

பதவியின் பெயர் காலியிடங்கள்
Commercial – Ticket Clerk 700
Accounts Clerk – Typist 200
Junior Clerk – Typist 600
Trains Clerk 188
மொத்தம் 1,688

கல்வித் தகுதி : 

.

பதவியின் பெயர் கல்வித் தகுதி
Commercial – Ticket Clerk 12ஆம் வகுப்பு தேர்ச்சி
Accounts Clerk – Typist 12ஆம் வகுப்பு தேர்ச்சி
Junior Clerk – Typist 12ஆம் வகுப்பு தேர்ச்சி
Trains Clerk 12ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு விவரங்கள் : 

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கு விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும்.

வயது தளர்வு : 

அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும்.

பிரிவு வயது தளர்வு
SC / ST 5 ஆண்டுகள்
OBC (NCL) 3 ஆண்டுகள்
PwBD – UR 10 ஆண்டுகள்
PwBD – OBC 13 ஆண்டுகள்
PwBD – SC/ST 15 ஆண்டுகள்
Ex-Servicemen அரசு விதிமுறைகளின்படி

 சம்பள விவரங்கள்

பதவியின் பெயர் மாதச் சம்பளம்
Commercial – Ticket Clerk ₹21,700 சம்பளம் வழங்கப்படும்.
Accounts Clerk – Typist ₹19,900 சம்பளம் வழங்கப்படும்.
Junior Clerk – Typist ₹19,900 சம்பளம் வழங்கப்படும்.
Trains Clerk ₹19,900 சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை

ரயில்வே வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட கட்டங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • முதல் கட்ட கணினி வழித் தேர்வு (First Stage CBT)
  • இரண்டாம் கட்ட கணினி வழித் தேர்வு (Second Stage CBT)
  • சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification)
  • மருத்துவப் பரிசோதனை (Medical Examination)

Exam Pattern: 

  • First Stage Computer Based Test (CBT) 
    • 40 Questions on General Awareness 
    • 30 Questions on Mathematics 
    • 30 Questions on General Intelligence and Reasoning
    • Total Time Duration: 90 Minutes per CBT stage
  • Second Stage Computer Based Test (CBT)
    • 50 Questions on General Awareness 
    • 35 Questions on Mathematics 
    • 35 Questions on General Intelligence and Reasoning
    • Total Time Duration: 90 Minutes per CBT stage

 

விண்ணப்ப கட்டணம் : 

விண்ணப்பதாரர் பிரிவு விண்ணப்பக் கட்டணம் CBT தேர்வுக்குப் பிறகு திரும்ப வழங்கப்படும் தொகை
SC / ST ₹250 முழுத் தொகை
Ex-Servicemen ₹250 முழுத் தொகை
பெண்கள் ₹250 முழுத் தொகை
Transgender ₹250 முழுத் தொகை
Minorities ₹250 முழுத் தொகை
Economically Backward Class (EBC) ₹250 முழுத் தொகை
மற்ற பிரிவினர் ₹500 ₹400

முக்கியமான தேதிகள்:

நிகழ்வு தேதி
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி 15.10.2026
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 13.11.2026

எப்படி விண்ணப்பிப்பது:

RRB NTPC ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

RRB NTPC 12th Level Recruitment 2026 பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

  1. முதலில் அதிகாரப்பூர்வ RRB விண்ணப்ப இணையதளத்திற்குச் செல்லவும் https://www.rrbapply.gov.in/
  2. CEN 07/2026 – NTPC Under Graduate அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
  3. New Registration மூலம் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்திப் பதிவு செய்யவும்.
  4. Login செய்து தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.
  5. கல்வித் தகுதி தொடர்பான விவரங்களை நிரப்பவும்.
  6. தேவையான புகைப்படம், கையொப்பம் மற்றும் ஆவணங்களைப் பதிவேற்றவும்.
  7. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  8. உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும்.
  9. விண்ணப்பத்தை Final Submit செய்து, Application Form-ஐப் பதிவிறக்கம் செய்து அல்லது அச்சிட்டு வைத்துக்கொள்ளவும்.