#Breaking துணிவு, வாரிசு திரைப்பட சிறப்புக் காட்சிகள் ரத்து!!

 
varisu vs thunivu

துணிவு, வாரிசு திரைப்பட சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

thunivu

பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படமும், விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் நாளை  வெளியாகிறது.   இரண்டு திரைப்படங்களுக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு காட்சி திரையிட வேண்டாம் என திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படத்தை நாளை அதிகாலை ஒரு மணிக்கும் ,  விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் சிறப்பு காட்சி அதிகாலை 4 மணிக்கும் திரையிட விநியோக நிறுவனங்கள் முடிவெடுத்தனர். இந்நிலையில் வாரிசு - துணிவு திரைப்படங்களின் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  ஜனவரி 13 முதல் 16ம் தேதி வரை திரையரங்குகளில் அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்தாகியுள்ளது. திரையரங்க வளாகங்களில் உள்ள உயர்வான பேனர்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்ய தமிழக அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

varisu

13, 14, 15, 16ஆம் தேதிகளில் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தியேட்டர் வளாகங்களில் அதிக உயரத்தில் பேனர், பாலாபிஷேகம் செய்ய தடை செய்யப்பட்டுள்ள நிலையில்  விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.