தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..

 
மழை

தமிழகத்தில் இன்றும் நாளையும் இடி , மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும்  ( ஆக.22 - ஆக.23)  தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  

24.08.2024 முதல் 28.08.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசான / மிதமான  மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை  27 - 28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும் நாளையும்  ( ஆக.22 - ஆக.23) மன்னார்   வளைகுடா,  தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

24.08.2024 முதல் 26.08.2024 வரை: மன்னார்   வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.