த்தூ..! மீண்டும் வைரமுத்து விவகாரத்தில் ஆத்திரப்பட்ட சின்மயி

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வைரமுத்துவை வசைபாடி வருகிறார் பாடகி சின்மயி. மகளிர் தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து பெண்ணின் சிறப்பை பற்றி கவிதை எழுத, அந்த கவிதை மாதிரியே அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் சின்மயி.
மாலையும் நகையும்
கேட்கவில்லை பெண்;
மதித்தல் கேட்கிறாள்
வீடும் வாசலும்
விரும்பவில்லை பெண்;
கல்வி கேட்கிறாள்
ஆடம்பரம் அங்கீகாரம்
ஆசைப்படவில்லை பெண்;
நம்பிக்கை கேட்கிறாள்
கொடுத்துப் பாருங்கள்;
அவளே பாதுகாப்பாள்
ஆண்களையும்
உலக
மகளிர் திருநாள் வாழ்த்து
-என்று வைரமுத்து எழுதிய கவிதைக்குத்தான்,
அவ்வீட்டு வாசலை தாண்டும்பொழுது
காம வெறியர்களை கேட்கவில்லை பெண்;
பாதுகாப்பு கேட்கிறாள்.
பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும்பொழுது அவதூரு கேட்கவில்லை பெண்;
நியாயம் கேட்கிறாள்.
-என்று பதிலடி கொடுத்திருக்கிறார் சின்மயி.
அவர் மேலும், நீதி தேவதைக்கு என்ன வெணும்னு உன்ன போல ஆம்பள சொல்லத்தேவையில்ல என்கிறார்.
மீடூ மூலம் வைரமுத்து மீது பாலியல் புகார் சொல்லி இத்தனை வருடங்கள் ஆனாலும் கூட வைரமுத்து முக்கியமான தருணங்களில் எல்லால் அவரை திட்டித்தீர்த்து வருகிறார் சின்மயி. அதனால்தான் நெட்டிசன்களும், போன ஜென்மத்தில உங்களுக்கும் வைரமுத்து சாருக்கும் ஏதோ ஒரு கனெக்சன் இருந்திருக்கு போல ..அதான் பலவருசம் ஆகியும் நீங்க அடிக்கடி அவர் மேல கோபபடுமாதிரி அவர் மேல் உள்ள அன்பை ஆசையை மறைமுகமா அடிக்கடி வெளிபடுத்துறிங்க... ரெண்டு பேரும் மனம்விட்டு பேசுங்க எல்லாம் சரியாகிடும்..வைரமுத்து மீது நீங்கள் தேவையற்ற அவதூறு பரப்புகிறீர்கள்.. நீங்கள் கூறும் குற்றச்சாட்டுக்கு உங்களிடம் ஆதாரம் உள்ளதா? இருந்தால் இங்கு ஏன் புலம்ப வேண்டும்..திருமணத்தன்று அம்மாவும் பொண்ணும் அவ்ளோ சந்தோசமா துள்ளக்குதித்து அவரை வரவேற்று கொண்டாடிய காட்சிதான் பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. பார்ப்பனீய புலம்பல். பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதற்கு ஆத்திரப்பட சின்மயி, ‘’த்தூ..! என்னிக்கோ பதிவிட்ட thread ஆனா பாலியல் குற்றவாளிக்கே துணைபோயிட்டு இருந்தா பார்க்க நேரமேது. உங்க கூட்டம் அப்படியாப்பட்டது. பாலியல் குற்றவாளிக்கு துணைப்பொகும், ஒத்துழைக்கும், ஊக்குவிக்கும் மற்றும் பல சேவைகள் செய்யும் உங்க கும்பலோட கருத்த உங்க வீட்டு பெண்களிடமே முன்வெய்யுங்கள். அடுத்து நிர்பயா ரேபிஸ்ட் நல சங்கம் ஆரம்பிங்க. உங்களுக்கு ஸெட் ஆகும்அவர் ஒழுங்குன்னா defamation case போடலாமே? அதான் உலகமே சொல்லுதே அவர் ஒழுங்கில்லன்னு. உங்கள போல பாலியல் குற்றவாளிக்கு துணைபோனால் வரும் ஆதாயத்த நம்புறவங்களுக்கு மட்டும் தான் கஷ்டமா இருக்கும். Spelling mistake illama ellam type panna mudiyadhu. Suit yourself’’என்கிறார்.