தண்ணீர் கேனில் வாங்கி வீட்டில் வைக்கப்பட்டிருந்ததால் விபரீதம்- மூவர் தீயில் கருகினர்

 
ச்

பெட்ரோல் தட்டுப்பாடு அச்சத்தில் தண்ணீர் கேனில் வாங்கி வீட்டில் வைக்கப்பட்டிருந்த பெட்ரோலால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் இருந்த மூவர் தீக்காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பெட்ரோல் தட்டுப்பாடு அச்சத்தில் 10 லிட்டர் தண்ணீர் பாட்டிலில் வாங்கி வைத்திருந்த பெட்ரோல் தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீக்காயம் அடைந்தனர்.கேனில் இருந்த பெட்ரோலை சிறிய பாட்டிலுக்கு மாற்றும் போது, பக்கத்தில் விளக்கு எரிந்ததாகவும், இதனால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.